இடுக்கி: கேரள மாநிலம் குமளி-கம்பம் சாலையில் நேற்றிரவு (டிசம்பர் 23) 11 மணியளவில் சபரிமலை பக்தர்கள் சென்ற கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் தமிழர்கள் 8 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த காரில் குழந்தை உள்பட 12 பேர் இருக்காலம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த 2 பேரும் குமளியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது. இடுக்கி மாவட்ட ஆட்சியர் மீட்புப் பணியை நேரடியாக கவனித்துவருகிறார். முதல்கட்ட தகவலில் உயிரிழந்தவர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர்கள்.
அவர்களில் நாகராஜ் (46), தேவதாஸ் (55), சிவக்குமார் (45), சக்கம்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி (55), மறவப்பட்டியைச் சேர்ந்த கன்னி சுவாமி (60), சண்முக சுந்தரபுரத்தைச் சேர்ந்த வினோத்குமார் (43) ஆகிய 6 பேர் அடையாளம் காணப்படட்டுள்ளனர். மீதமுள்ள 2 பேரின் விவரங்கள் கிடைக்கவில்லை. 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: Sikkim tragedy: விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 16 பேர் பலி