மஹாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பபட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள்தோறும் உயிரிழப்போரின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.
பல சுடுகாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தகனம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கொரோனா பரவும் என்ற பீதியால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், பீட் மாவட்டம், அம்பஜோகை நகரத்தில் உள்ள மயானத்தில் நேற்று (ஏப்.7) கரோனாவல் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு மேற்கொள்ள அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து, இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மண்ட்வா சாலையில் ஒரு தனி இடம் அடையாளம் காணப்பட்டது.
எனினும், அப்பகுதியில் இடவசதி குறைவாக இருந்ததால், 8 பேரின் உடல்களை ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்