ETV Bharat / bharat

16 வயது கிரிக்கெட் பௌலரைப் பாராட்டிய ராகுல் காந்தி - பயிற்சிக்கு உதவ முன்வந்த ராஜஸ்தான் அரசு - சவாய் மான்சிங் மைதானம்

ராஜஸ்தானில் 16 வயதான சிறுவனின் பௌலிங் திறனைக்கண்டு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி ட்விட்டரில் பாராட்டிய நிலையில், அவரின் பயிற்சிக்கு ராஜஸ்தான் அரசு உதவும் என அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் நேரில் சந்தித்து உறுதியளித்துள்ளார்.

கிரிக்கெட் பௌலரை பாராட்டிய ராகுல் காந்தி

author img

By

Published : Jul 31, 2022, 2:56 PM IST

ராய்ப்பூர்: ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தைச்சேர்ந்தவர் பாரத் சிங் (16). கிரிக்கெட் மீது பேரார்வம் கொண்ட இச்சிறுவன், மீன் வலைகளைக்கொண்டும், மரக்கட்டைகளை ஸ்டம்பாக கொண்டும் தனது கிராமத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

அந்த சிறுவனின் அபராமான பந்துவீச்சு திறனைக்கண்ட அப்பகுதியினர் பலரும், அவரது பயிற்சியை காணொலியாகப்பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். வசதி குறைவான அந்தச்சிறுவனுக்கு முறையான கிரிக்கெட் பயிற்சி அளித்து ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.

மேலும், பாரத் சிங் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியின் கவனத்திற்குக்கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, ராகுல் காந்தி பாரத் சிங் பந்துவீசும் காணொலியைப் பகிர்ந்து,"நம் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பல்வேறு திறமைகள் ஒளிந்திருக்கின்றன.

அவற்றைக்கண்டறிந்து ஊக்கப்படுத்துவதே நமது கடமை. இந்தச்சிறுவனின் கனவு நிறைவேற உதவி செய்யுங்கள்" என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், பாரத் சிங்கை சந்திக்க முதலமைச்சர் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பாரத் சிங் தனது தந்தை கலு சிங் மற்றும் உறவினருடன் முதலமைச்சர் அசோக் கெலாட்டை அவரின் வீட்டில் நேற்று (ஜூலை 30) சந்தித்தார். இச்சந்திப்பின் போது, ராஜஸ்தான் கிரிக்கெட் அகாடமி (ஆர்சிஏ) தலைவர் வைபவ் கெலாட் உடனிருந்தார்.

  • हमारे देश के कोने-कोने में अद्भुत प्रतिभा छिपी हुई है, जिसे पहचानना और बढ़ावा देना हमारा कर्तव्य है।@ashokgehlot51 जी से मेरा निवेदन है, इस बच्चे का सपना साकार करने के लिए कृपया उसकी सहायता करें। https://t.co/vlEKd8UkmS

    — Rahul Gandhi (@RahulGandhi) July 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அப்போது, பாரத் சிங் சவாய் மான்சிங் மைதானத்தில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற உணவு, இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அரசு ஏற்பாடு செய்து தரும் என முதலமைச்சர் உறுதியளித்தார். அதுமட்டுமின்றி, சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயற்சியளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ, பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் அக்தர் ஆகியோரின் பந்துவீச்சு முறையால் அதிகம் ஈர்க்கப்பட்டதாக பாரத் சிங் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காமன்வெல்த் 2022: பளு தூக்குதலில் பதக்கங்களை அள்ளிய இந்தியா - பதக்கப்பட்டியலில் எத்தனையாவது இடம்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.