பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள மசெளர்ஹியில் இருக்கும் சாபூர் என்ற கிராமத்தில் ராஜ்குமார் - சந்திரபிரபா குமாரி என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பாபி ராஜ் (8) என்ற மகன் உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு நர்சரி முதல் 10 ஆம் வகுப்பு வரையில் உள்ள தனியார் பள்ளியை பாபியின் பெற்றோர் அப்பகுதியில் தொடங்கினர்.
இந்த நேரத்தில் கரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வர பள்ளி மூடப்பட்டது. இதனால் தங்கள் வீடுகளிலே பள்ளிப் பாடத்தை தொடங்கினர். அப்போது சிறுவன் பாபி, 10 ஆம் வகுப்பில் உள்ள கணிதப்பாடத்திற்கு தீர்வினை எவ்வித சந்தேகமும் இன்றி தீர்த்துள்ளார்.
-
When you touch a life , that’s the time your life changes ! pic.twitter.com/9k60kPizxd
— sonu sood (@SonuSood) September 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">When you touch a life , that’s the time your life changes ! pic.twitter.com/9k60kPizxd
— sonu sood (@SonuSood) September 23, 2022When you touch a life , that’s the time your life changes ! pic.twitter.com/9k60kPizxd
— sonu sood (@SonuSood) September 23, 2022
இதனையடுத்து பாபி, அப்பகுதியில் வசிக்கும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுக்கத் தொடங்கியுள்ளார். இவரது திறமையால் தற்போது பல மேல்நிலை மாணவர்களும் பாபியின் டியூசனில் படித்து வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து அறிந்து கொண்ட நடிகர் சோனுசூட், பாபியின் மேல்படிப்பிற்கு உதவுவதாக உறுதி அளித்துள்ளார். ஒரு சிறந்த விஞ்ஞானியாக வர வேண்டும் என்பதே பாபியின் கனவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "ஆணுறைகளும் வேண்டுமா?" சானிட்டரி பேட் குறித்து சிறுமியின் கேள்விக்கு பீகார் ஐஏஎஸ் அதிகாரியின் சர்ச்சை பதில்...