ETV Bharat / bharat

நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கதுறை சோதனை

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் தலைமை அலுவலம் உள்பட 11 இடங்களில் அமலாக்கதுறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

ed-raids-national-herald-office-other-locations-in-money-laundering-case

author img

By

Published : Aug 2, 2022, 3:24 PM IST

டெல்லி: முன்னாள் பிரதமரும் ராகுல் காந்தியின் கொள்ளுத் தாத்தாவுமான ஜவஹர்லால் நேரு 1937ஆம் ஆண்டு அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (Associated Journals Limited) என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதில் 5,000-க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த நிறுவனத்தின் மூலம் முக்கிய தலைவர்களால் எழுதப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையும், உருது மொழியில் குவாமி ஆவாஸ் என்ற பத்திரிகையும், இந்தி மொழியில் நவ்ஜீவன் என்ற நாளிதழும் வெளியிடப்பட்டது.

இந்த பத்திரிக்கைகளில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளும், விமர்சனங்களும் இடம்பெற்றதால், கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 1942ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை தடை செய்தது. இதனால் பொருளாதார பாதுகாப்பு கருதி இந்த நிறுவனம் நாட்டின் பல நகரங்களில் நிலங்களை வாங்கியது. இதையடுத்து 1945ஆம் ஆண்டு நிறுவனம் மீண்டும் செயல்படத்தொடங்கியது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்று, முதல் பிரதமராக நேரு பதவியேற்றார். இதன் காரணமாக, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்தார். 2008ஆம் ஆண்டில் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அதே ஆண்டில் பத்திரிகை நிறுத்தப்பட்டது.

அப்போது 1,057 பங்குதாரர்களைக் கொண்டிருந்தது. ரூ. 90 கோடி ரூபாய் கடன்பட்டிருந்தது. இந்த நிலையில் 2011ஆம் ஆண்டு யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற லாப நோக்கமற்ற நிறுவனம் தொடங்கப்படுகிறது. இதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி இருவரும் உறுப்பினர்களாக உள்ளனர். அந்நிறுவனத்தில் தலா 38 விழுக்காடு பங்குகளை கொண்டிருக்கின்றனர். மீதமுள்ள 24% பங்குகள் காங்கிரஸ் மூத்த தலைவர்களான மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே உள்ளிட்டோர் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிறுவனத்தின் மூலம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.90 கோடி ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. இதனடிப்படையில் 2016ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி 2012ஆம் ஆண்டு சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்கிறார். அதில், 2011ஆம் ஆண்டு வெறும் ரூ.50 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்ட "யங் இந்தியா பிரைவேட் லிமிடெட்" என்ற "போலி நிறுவனம்" மூலம் ரூ.90 கோடி கடன் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கடனுக்காக டெல்லியில் உள்ள ஹெரால்டு ஹவுஸ் கட்டடம் உள்பட ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இது பண மோசடியாகும்" எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்துவருகிறது. இதுகுறித்து விசாரணைக்காக சோனியா காந்தி, ராகுல்காந்தி இருவரும் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி கடந்த ஜூன் 8ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி ராகுல்காந்தி ஜூன் 13ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து 5 நாள்களுக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் இரண்டு வாரங்களுக்கு முன்பு இரண்டு கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று (ஆக. 2) டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் தலைமை அலுவலம் உள்பட 11 இடங்களில் அமலாக்கதுறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியாவில் குரங்கம்மை தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதா..? - மன்சுக் மாண்டவியா பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.