மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது.
முதல்- அமைச்சராக உத்தவ் தாக்கரே பொறுப்பில் வகித்துவருகிறார். இந்த நிலையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்தின் ரூ.6.45 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், அமலாக்கத்துறை அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
நவாப் மாலிக்கிற்கு நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு - தேவேந்திர பட்னாவிஸ் பகீர் புகார்
இந்நிலையில் தற்போது அவரின் ரூ.6.45 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் அண்மையில் உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் நவாப் மாலிக் என்பவர் மீதும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. மேலும், இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் இவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் பதவியை இழந்த நவாப் மாலிக்கிடம் தற்போதும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் முதல்- அமைச்சர் உத்தவ் தாக்கரேவின் நெருங்கிய உறவினர் (மருமகன்) ஒருவரும் அமலாக்கத்துறை பிடியில் சிக்கியுள்ளார். அவரின் ரூ.6.45 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது: அமலாக்கத்துறை தீவிர விசாரணை