டெல்லி: கலால் வரி மோசடி வழக்குத் தொடர்பாக இந்தோ ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சமீர் மகேந்திருவை அமலாக்க துறையினர் இன்று (செப்-28) காலை கைது செய்தனர். முன்னதாக நேற்று (செப்-27) மாலை ஆம் ஆத்மி கட்சியின் ஊடக மேலாளர் விஜய் நாயர் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். ஒப்பந்தத்தை எடுக்க லஞ்சம் கொடுத்ததாக சமீர் மகேந்திரு மீது குற்றம் சாட்டப்பட்டது.
புதிய கலால் கொள்கையை டெல்லி அரசு கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி அமல்படுத்தியது, தற்போது அது திரும்பப் பெறப்பட்டுள்ளது. புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினரின் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சமீர் மற்றும் விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கைதானவர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த பணமோசடி வழக்கில் சிபிஐ துறை பதிவு செய்த எஃப்ஐஆர்-இன் அடிப்படையில் இரண்டு மத்திய அமைப்புகளும் பல சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இதற்கிடையில் சிசோடியாவின் கூட்டாளி எனக் கருதப்படும் அர்ஜுன் பாண்டே, பொழுதுபோக்கு மற்றும் நிகழ்வு மேலாண்மை நிறுவனமான ஒன்லி மச் லவுடரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி நாயர் சார்பாக மகேந்திரனிடம் இருந்து சுமார் 2 முதல் 4 கோடி ரூபாய் பெற்றதாக அந்த எஃப்ஐஆர்-இல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:குஜராத் சென்ற கெஜ்ரிவால் - மோடி மோடி என முழக்கமிட்டு எதிர்ப்பு