தேர்தலில் வேட்பாளர்களுக்கான செலவுத்தொகை உச்சவரம்பு குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வரம்புத் தொகையைக் காட்டிலும் 10 விழுக்காடு அதிகம் செலவு செய்துகொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநில தலைமை தேர்தல் அலுவலர் கருணா ராஜூ,"இனி பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு உச்சவரம்பு தொகை அதிகரிக்கப்படும் எனவும், மக்களவைத் தேர்தலில் இருந்த உச்சவரம்பு தொகை, ரூ.70 லட்சத்திலிருந்து ரூ.77 லட்சமாகவும், சட்டப்பேரவைத் தேர்தலில் செலவுத் தொகை உச்சவரம்பு ரூ.28 லட்சத்திலிருந்து ரூ.30.80 லட்சமாகவும் உயர்த்தப்படுகிறது" என அறிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் தொகை மற்றும் விலைவாசி நிலவரத்திற்கு ஏற்றவாறு தேர்தல் செலவுத்தொகை உச்சவரம்பு நிர்ணயிக்கக் குழு ஒன்றையும் அவர் அமைத்துள்ளார்.
இதையும் படிங்க: ‘விதை ஒன்று வீழ்ந்திடின், மரம் வந்து சேரும்’ - இயற்கையின் பேரரசன் அமர்நாத் தாஸ்!