டெல்லி: மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த வாரம் குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் ரூ.1,026 கோடி மதிப்புள்ள 513 கிலோ போதைப்பொருள்களை பறிமுதல் செய்தனர். அதோடு ஒரு பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல பலமுறை குஜராத்தில் முழுவதும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட போதிலும், மோடி அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இன்னும் எவ்வளவு காலம் பிரதமர் அமைதியாக இருப்பார் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "காந்தி, பட்டேல் வாழ்ந்த புனித பூமியான குஜராத்தில் போதைப்பொருள்களை பரப்புவது யார் ?. ஒரு குறிப்பிட்ட துறைமுகத்தில் பலமுறை போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட போதிலும், துறைமுக உரிமையாளரிடம் இதுவரை விசாரணை நடத்தப்படாதது ஏன் ?.
மாநிலம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசாரால் ஏன் பிடிக்க முடியவில்லை ?. போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு பாதுகாப்பு தருவது யார் ?. இன்னும் எவ்வளவு காலம் பிரதமரே இதை அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டிருப்பீர்கள், பதில் சொல்லியாக வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்திய உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டும்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி...