போர்ட் பிளேர்: அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயருக்கு தென்கிழக்கே 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் போர்ட் ப்ளேயரில் இருந்து 187 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் 30 கி.மீ. ஆழத்தில் காலை 8.05 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதுவரை சேதங்கள், உயிரிழப்புகள் பதிவாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. முன்னதாக அதிகாலை 5.57 மணியளவில் போர்ட்பிளேயருக்கு தென்கிழக்கே 244 கி.மீ தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: TNPL 2022: விஷால் வைத்தியாவின் அதிரடியில் திண்டுக்கல் அசத்தல் வெற்றி