ETV Bharat / bharat

குஜராத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

குஜராத்தில் ராஜ்கோட் பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 400 முறைக்கு மேல் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால் இது நிலநடுக்கத்தின் திரள் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

earthquake
earthquake
author img

By

Published : Feb 26, 2023, 10:04 PM IST

ராஜ்கோட் (குஜராத்): துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ராஜ்கோட்டில் இருந்து மேற்கே 270 கிமீ தொலைவில் பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை 3.21 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 400 மிதமான நிலநடுக்கங்கள் பதிவாகியிருப்பதால் இது, 'நிலநடுக்க திரளின்' மையப்பகுதியாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு திரள் என்பது பெரும்பாலும் சிறிய நிலநடுக்கங்களின் வரிசையாகும், அவை பொதுவாக குறுகிய காலமாக இருக்கும், ஆனால் நாட்கள், வாரங்கள் அல்லது சில நேரங்களில் மாதங்கள் கூட தொடரலாம் மற்றும் அடிக்கடி அதே இடத்தில் மீண்டும் நிகழலாம். இந்த 400 நில அதிர்வுகளில் பல அம்ரேலியின் மிதியாலா கிராமத்தில் உணரப்பட்டவையாகும். இதனால் இங்கு வசிப்பவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் வீடுகளுக்கு வெளியே தூங்கத் தொடங்கியுள்ளனர்.

அம்ரேலி மாவட்டத்தில் அதிகப்படியான நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான இந்த பகுதியின் டெக்டோனிக் அமைப்பு மற்றும் ஹைட்ராலஜிக்கல் லோடிங் காரணம் என்று காந்திநகரைச் சேர்ந்த நிலநடுக்கவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISR) ஆய்வாளர் ஜெனரல் சுமர் சோப்ரா கூறினார்.

பிப்ரவரி 23 முதல் 48 மணி நேரத்தில், அம்ரேலியின் சவர்குண்ட்லா மற்றும் கம்பா தாலுகாக்களில் 3.1 முதல் 3.4 என்ற அளவில் நான்கு நில அதிர்வுகள் பதிவாகியுள்ளது அங்கு குடியிருப்பாளர்களை கவலையடையச் செய்துள்ளது. ஜனவரி 2001 இல், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13,800 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1.67 லட்சம் பேர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் மாவட்டத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.

அம்ரேலியில் சமீபத்திய நில அதிர்வு செயல்பாடு பற்றி ஆய்வாளர் சோப்ராவிடம் கேட்டதற்கு, இது ஒரு "நிலநடுக்கம் திரள்" பகுதி. இதில் சிறிய நடுக்கம் தொடர்ந்து நிகழும் என்று கூறினார். "கடந்த இரண்டு வருடங்கள் மற்றும் இரண்டு மாதங்களில், நாங்கள் அம்ரேலியில் 400 லேசான நடுக்கங்களை பதிவு செய்துள்ளோம், அதில் 86 சதவீதம் 2 ரிக்டருக்கும் கீழே இருந்தது, அதே நேரத்தில் 13 சதவீதம் 2 மற்றும் 3 ரிக்டர்களில் இருந்தது மற்றும் ஐந்து நில அதிர்வுகள் மட்டுமே 3 ரிக்டர்களுக்கு மேல் இருந்தது. இந்த லேசான நடுக்கங்களில் பெரும்பாலானவை மக்களால் உணரப்படுவதில்லை, இயந்திரங்களில் மட்டுமே அவை பதிவாகிறது என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: ஜம்முவில் இருந்து 388 பேர் விமானப்படை விமானத்தில் லே-வுக்கு பயணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.