ETV Bharat / bharat

பஞ்சாப்பில் நில அதிர்வு.. - புவியியலாளர்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப்பில் நிலநடுக்கம்
பஞ்சாப்பில் நிலநடுக்கம்
author img

By

Published : Nov 14, 2022, 7:09 AM IST

Updated : Nov 14, 2022, 10:29 AM IST

ஜலந்தர் (பஞ்சாப்): பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர், பொருள் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இன்று அதிகாலை 3.42 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. தேசிய நில அதிர்வு மையத்தின் கூற்றுப்படி, நிலநடுக்கத்தின் மையம் அமிர்தசரஸிலிருந்து 145 கிமீ மேற்கு - வடமேற்கில் பூமிக்கு அடியில் 120 கிமீ ஆழத்தில் இருந்தது.

நேற்று இரவு, டெல்லி மற்றும் வட இந்தியாவின் சில மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. டெல்லி என்சிஆர் பகுதியில் இரவு 8 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. உத்தரபிரதேசத்தில் காசியாபாத், நொய்டா, பிஜ்னோர், மொராதாபாத் மற்றும் அம்ரோஹா ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ், அல்மோரா, சாமோலி, ராம்நகர் மற்றும் உத்தரகாசி ஆகிய இடங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது.

நேபாளத்தில் சனிக்கிழமை இரவு 7:57 மணியளவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் 10 கி.மீ ஆழத்தில் இருந்தது.

புவியியலாளர்களின் கூற்றுப்படி, பூமிக்குள் 7 தட்டுகள் உள்ளன, அவை தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இந்த தட்டுகள் அதிகமாக மோதும் அந்த மண்டலம் ஃபால்ட் லைன் எனப்படும். மீண்டும் மீண்டும் மோதல்கள் காரணமாக தட்டுகளின் மூலைகள் வளைகின்றன. அதிக அழுத்தம் அதிகரிக்கும் போது, ​​தட்டுகள் உடையத் தொடங்கும். கீழே உள்ள ஆற்றல் வெளியே வருவதற்கான வழியைக் கண்டறிந்து, இடையூறுக்குப் பிறகு பூகம்பம் ஏற்படுகிறது.

இது தவிர, விண்கல் தாக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு, கண்ணிவெடி சோதனை மற்றும் அணுசக்தி சோதனை ஆகியவையும் நிலநடுக்கத்திற்கான காரணங்களாகும். ரிக்டர் அளவுகோலில் 7 அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால், 40 கி.மீ சுற்றளவில் நிலநடுக்கம் தீவிரமடையும். தூரம் அதிகரிக்கும் போது அதிர்வுகளும் குறையும்.

இதையும் படிங்க: விவாகரத்து வதந்தி; சோயிப் மாலிக்குடன் ரியாலிட்டி ஷோவை அறிவித்தார் சானியா மிர்சா

Last Updated : Nov 14, 2022, 10:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.