இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த சில நாள்களாக வெகுவாக உயர்ந்து வந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது மெல்ல குறையத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், டெல்லியில் தினசரி பாதிப்பு குறைந்துவருகிறது. அதேவேளை, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
13 மாநிலங்களில் தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். நாள்தோறும் தொடர்ந்து நான்கு லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகள் பதிவான நிலையில், அது தற்போது 3.29 லட்சமாகக் குறைந்துள்ளது. நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை இரண்டரை லட்சத்தை நெருங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.