டெல்லி: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றபின், முதல்முறையாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நான்கு நாள் பயணமாக இன்று நியூயார்க் செல்கிறார்.
அங்கு செல்லும் அவர், அமெரிக்கா-இந்தியா இடையேயான ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார். குறிப்பாக, இன்று தொடங்கி ஆகஸ்ட் 19ஆம் தேதிவரை நடைபெறும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார். இதில், ஆப்கானில் தாலிபன் தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
அத்துடன் சர்வதேச அமைதி, பாதுகாப்பு, அச்சுறுத்தல், தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை இந்தியா இரண்டு ஆண்டுகளுக்கு வகிக்கிறது. இந்த ஆண்டுகளில், கடல்சார் பாதுகாப்பு, அமைதி, பயங்கரவாத எதிர்ப்பு குறித்த முக்கிய நிகழ்வுகளில் இந்தியா தலைமை வகிக்கும்.
இதையும் படிங்க: ரஷ்யா செல்லும் வெளியுறவுத் துறை அமைச்சர்!