ETV Bharat / bharat

இஸ்ரேலில் ஜெய்சங்கர்.. பேச்சுவார்த்தை தீவிரம்.. தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறுமா?

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள்கள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு அவர் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டின் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான லேர் லாபிட் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

author img

By

Published : Oct 18, 2021, 7:54 PM IST

Jaishankar
Jaishankar

டெல்லி : இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் திங்கள்கிழமை (அக்.18) இஸ்ரேலிய பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான யேர் லாபிட்டைச் சந்தித்தார். இரு தலைவர்களும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

இது குறித்து ஜெய்சங்கர் ட்விட்டரில், “இஸ்ரேல் பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறைந அமைச்சர் யேர் லாபிட் (YairLapid) உடன் இன்று மிகவும் பயனுள்ள பேச்சு நடந்தது.

இரு தரப்பு உறவுகள்

இருவரும் பரந்த அளவிலான பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம்” எனத் தெரிவித்திருந்தார். மற்றொரு ட்வீட்டில், “இஸ்ரேலுடன் அடுத்த மாதம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இந்தியா ஒப்புக்கொண்டது. கோவிட் தடுப்பூசி சான்றிதழை பரஸ்பரம் அங்கீகரிப்பது குறித்து இரு தரப்பினரும் கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டனர்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, சர்வதேச சோலார் கூட்டணியின் புதிய உறுப்பினராக இஸ்ரேலை ஜெய்சங்கர் வரவேற்றார். இந்திய- இஸ்ரேல் நாடுகளின் இரு தரப்பு உறவுகளை மேலும் வளப்படுத்த ஒரு வரைபடத்தை தயார் செய்ய இஸ்ரேலின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை (அக்.17) ஐந்து நாள் பயணமாக இஸ்ரேலின் டெல் அவிவ் சென்றார். வெளிவிவகார அமைச்சராக ஜெய்சங்கர் இஸ்ரேல் நாட்டிற்கு வருவது இதுவே முதல் முறை.

நம்பிக்கை

தொடர்ந்து, ஜெய்சங்கர் இஸ்ரேலில் உள்ள இந்தியாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் சென்றார். குறிப்பாக, 1960 ஆம் ஆண்டில் சர்வோதயா தொழிலாளர்களால் நடப்பட்ட பூடன் தோப்பை நினைவுகூரும் ஒரு பலகையை திறந்து வைத்தார். அவர் யாத் வசேமில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

  • Very productive talks today with APM and FM @YairLapid.

    Discussed a wide range of regional and global issues.

    Agreed to resume FTA negotiations next month.

    Agreed in principle on mutual recognition of Covid vaccination certification. pic.twitter.com/sir0QDYzx3

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஞாயிற்றுக்கிழமை, (அக்.17) அவர் இஸ்ரேலில் உள்ள இந்திய யூத சமூகத்தையும் சந்தித்து, இந்தியா-இஸ்ரேல் உறவுகளில் அவர்களின் பன்முக பங்களிப்பைப் பாராட்டினார். வரவிருக்கும் ஆண்டுகளில் அவர்கள் இரு தரப்பையும் இன்னும் நெருக்கமாக கொண்டு வருவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுடன் வலுவான நட்புறவை வலுப்படுத்திவருகிறார். மேக் இன் இந்தியா திட்டத்துக்கும் இஸ்ரேலின் அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 'இனவாத பிரச்னையில் பொறுமை காக்க முடியாது' - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.