ETV Bharat / bharat

இந்தோ-பசுபிக்: ஜெய்சங்கர், பிளிங்டன் தொலைபேசி உரையாடல் - ஜெய்சங்கர் பிளிங்கன் உரையாடல்

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திங்கள்கிழமை இரவு (ஜனவரி 3) அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் அன்டோனி பிளிங்கனுடன் தொலைபேசியில் உரையாடினார். இதில், இந்தோ-பசுபிக், மற்ற உளகளாவிய விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாகப் பேசப்பட்டன.

்்
்ு
author img

By

Published : Jan 4, 2022, 7:37 PM IST

டெல்லி: திங்கள்கிழமை இரவு அன்டோனி பிளிங்கனைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜெய்சங்கர் விரிவாக உரையாடினார். இந்தத் தொலைபேசி உரையாடலில் பரந்த அளவிலான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

அதில், மிக முக்கியமாக இந்தோ-பசுபிக், மற்ற உலகளாவிய விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டன. தற்போது இந்தியாவும், அமெரிக்காவும் அடுத்த இருதரப்புப் பேச்சுவார்த்தைக்குத் (இருதரப்பு வெளியுறவு; பாதுகாப்பு) தயாராகிவருவது கவனத்தில் கொள்ளக்கத்தக்கது.

இந்தோ-பசுபிக்கில் அமைதி பாதுகாப்பு

இது குறித்து ஜெய்சங்கர் அவரது ட்வீட்டில், "அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கனுடன் பரந்த அளவிலான உரையாடல் நடைபெற்றது. இதில் இருதரப்பு விவகாரங்கள், இந்தோ-பசுபிக், முக்கியமான உலகளாவிய விஷயங்கள் பற்றி பேசப்பட்டன. மேலும் புத்தாண்டு வாழ்த்துகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டோம்" எனக் குறிப்பிட்டார்.

இந்தத் தொலைபேசி உரையாடலில் இருவரும் பன்முக மூலோபய கூட்டாண்மையை ஒருங்கிணைப்பதற்கும், விரிவுபடுத்துவதற்கும் தஙகளது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். வலுவான பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, வளரும் பொருளாதார ஈடுபாடு, சுகாதார பாதுகாப்பு ஒத்துழைப்பு, மக்களுக்கிடையேயான வலிமையான பிணைப்பு ஆகியவை முக்கியத் தூண்களாக விளங்குவதாக அவர்கள் பாராட்டிக்கொண்டனர்.

குறிப்பாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி - பாதுகாப்பிற்கான தங்களது உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். மேலும் அந்த உரையாடலில் இரு நாட்டு அமைச்சர்களும் நெருங்கிய உறவு நீடிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர்.

இருதரப்பு பேச்சுவார்த்தை எப்போது?

முன்னதாக பிளிங்கன் கடந்த டிசம்பர் மாதம் ஜெய்சங்கருடன் பேசினார். அப்போது, ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ அலுவலர்கள் உள்ளிட்டோர் இறந்ததற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • A broad ranging conversation yesterday night with @SecBlinken .

    Covered current bilateral issues, Indo-Pacific and pressing global matters. Also exchanged New Year greetings.

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்திய-அமெரிக்க இருதரப்பு வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை அமைச்சகப் பேச்சுவார்த்தை இந்த மாதத்திலோ அல்லது பிப்ரவரியிலோ வாஷிங்டன் நகரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் மருத்துவமனையில் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.