ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று (டிசம்பர் 26) அதிகாலையில் வந்த ஆர்டருக்காக சென்ற ஸ்விக்கி டெலிவரி பாய் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து கச்சிபௌலியில் நடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், கச்சிபௌலியில் உள்ள ஹோட்டலுக்கு வந்த உணவு ஆர்டரை எடுப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த நசீர் என்பவர் வீட்டிலிருந்து தனது இருசக்கர வானத்தில் புறப்பட்டுள்ளார்.
இவர் விப்ரோ சந்திப்பில் சென்றுகொண்டிருந்தபோது பின்னே வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அதோடு அவருக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த 4 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் நசீர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். 6 பேர் படுகாயமடைந்தனர். முதல்கட்ட தகவலில் லாரியின் பிரேக் சிஸ்டம் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரித்துவருகிறோம் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சீர்காழி அருகே ரவுடி ரெட் தினேஷ் வெட்டிக்கொலை