பால்கர்(மகாராஷ்டிரா): நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்ட வேளையில், மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் தொலைதூர போடோஷி கிராமத்தில் உள்ள மார்க்கட்வாடியைச் சேர்ந்த வந்தனா புதர் என்ற கர்ப்பிணிக்கு பிறந்த இரட்டைக்குழந்தைகள் உயிரிழந்தன.
மலைப்பகுதியான பால்கர் மாவட்டத்தில் சரியான சாலை வசதி மற்றும் சுகாதார சேவைகள் இல்லாததால் நோயுற்றுவர்கள் சிகிச்சைக்காக மூன்று கிலோமீட்டர் தூரம் குறுகிய பாதை வழியாக நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இங்குள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கும் இதே நிலை இருப்பதால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன, என அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.
அக்கிராமத்தில் வசித்து வரும் கர்ப்பவதியான வந்தனாவிற்கு நேற்று (ஆகஸ்ட் 15) பிரசவ வலி ஏற்பட்டதால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இருப்பினும் தாமதமானதால் வழியிலேயே இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. மருத்துவ வசதி இல்லாததால் குழந்தைகள் வழியிலேயே இறந்தன. இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சிவமோகா வன்முறைச்சம்பவத்தில் குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்