ETV Bharat / bharat

தனியார் பேருந்து மோதிய விபத்தில் பக்தர்கள் 5 பேர் பலி!

உத்தராகண்ட் மாநிலம், சம்பாவத் அருகே சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர்.

bus accident
பேருந்து விபத்து
author img

By

Published : Mar 23, 2023, 10:11 PM IST

சம்பாவத்: உத்தராகண்ட் மாநிலம், சம்பாவத் மாவட்டத்தில் இந்தியா - நேபாளம் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது, தனக்பூர். இங்குள்ள மா புர்னாகிரி கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மலைக்கோயிலில் இருந்து கீழே இறங்கிய பக்தர்கள், துலிகார்ஹ் கிராமத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடம் அருகே தூங்கிக் கொண்டிருந்னர். இந்நிலையில் இன்று அதிகாலை அந்த வழியாக வந்த தனியார் பேருந்து, தூங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பக்தர்கள் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், பேருந்தில் திடீரென பிரேக் செயல் இழந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாயா ராம், பத்ரிநாத், ரமாடி, நேத்ராவதி, அமராவதி ஆகியோர் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மகளிர் நலத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

  • मुख्यमंत्री श्री @pushkardhami ने टनकपुर स्थित ठुलीगाड़ में हुई बस दुर्घटना में श्रद्धालुओं की मृत्यु पर गहरा दुख व्यक्त करते हुए दिवंगतों की आत्मा की शांति तथा उनके परिवारजनों को इस दु:ख को सहन करने की शक्ति प्रदान करने की कामना की है।

    — CM Office Uttarakhand (@ukcmo) March 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஒரு லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். பேருந்து மோதிய விபத்தில் பக்தர்கள் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: போலீசாருக்கு போக்கு காட்டும் அம்ரித்பால் சிங்: அடைக்கலம் கொடுத்த பெண் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.