கண்ணூர் : வடக்கும்பாடி கூலிபஜாரில் வசிக்கும் ரசீனா (29) என்ற பெண் நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். குடிபோதையில் இருந்த அவர் அவ்வழியாக சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியுள்ளார்.
இதில் குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக பொதுமக்கள் அவரிடம் கேட்டபோது தகாத வார்த்தைகளில் பேசி தாக்கியுள்ளார். மேலும் இதனை வீடியோ பதிவு செய்தவரின் மொபைலை பறித்து சாலையில் வீசி ரகளையில் ஈடுபட்டார்.
பின்னர் அங்கு சென்ற போலீசார் அப்பெண்ணை கைது செய்தனர். அவர் மது அருந்தியது சோதனையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : உ.பியில் காதலுக்காக மதம் மாறிய முஸ்லீம் பெண்கள்!