ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப் படைத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) ட்ரோன் மூலமாக இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து மாநிலத்திலுள்ள முக்கிய பகுதிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாநிலத்தில் ஆங்காங்கே தொடர்ச்சியாக ட்ரோன்கள் பறக்கின்றன. இது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத தளபதி மற்றும் அவரின் பாகிஸ்தான் நண்பர் ஆகியோர் கடந்த வாரம் ஜம்முவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் இந்தச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்தேறிவருகின்றன.
இதையும் படிங்க : தொழுகை முடிந்து வீடு திரும்பிய காவல் ஆய்வாளர் சுட்டுக்கொலை!
இதற்கிடையில் இன்று (ஜூன் 30) அதிகாலையிலும் மீரான் சாஹிப், கலுச்சக் மற்றும் குஞ்ச்வானி ஆகிய இடங்களில் ட்ரோன்கள் பறந்துள்ளன. இதனை விமானப் படை அலுவலர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து, “ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம்களை சுற்றி கடந்த நான்கு நாள்களில், குறைந்தது ஏழு ட்ரோன்கள் காணப்பட்டன” என்றும் அவர்கள் கூறினார்கள்.
இந்நிலையில், மாநிலத்தின் முக்கிய பகுதிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : பயங்கரவாதிகளை எச்சரிக்கும் காஷ்மீர் ஐஜி!