புதுச்சேரியில் பாஜக கூட்டணி கட்சிகளான என் ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகள், அதிமுக 5 தொகுதிகள், பாஜக 9 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்நிலையில், பாஜக முக்கிய பிரமுகர்கள் புதுச்சேரியில் பலகட்ட பரப்புரைகளை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 30) மாலை புதுச்சேரியில் ரோடியர் மில் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் தலைவர்கள் பங்கேற்கின்றனர். பிரதமர் வருகையை ஒட்டி புதுச்சேரி_கடலூர் சாலை சில இடங்களிலும், நகர பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் பாதுகாப்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதுச்சேரியில் பறக்கும் கேமராக்களை பயன்படுத்துவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து அம்மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், “இன்றும் நாளையும் பறக்கும் கேமரா விமானங்கள் எதுவும் செல்வதற்கு அனுமதி இல்லை” எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஹோலி வாழ்த்து!