ETV Bharat / bharat

வன்னியர்களுக்காக போராடியவரை நாய் என்பதா? ராமதாசுக்கு திமுக எம்பி கண்டனம்! - திமுக எம்பி செந்தில்குமார்

வன்னியர் இடஒதுக்கீட்டிற்காக போராடிய சி.என்.ராமமூர்த்தியை பொதுவெளியில் அநாகரிகமாக நாய் என்று விமர்சிப்பதா என பாமக நிறுவனர் ராமதாசுக்கு தருமபுரி திமுக எம்பி செந்தில் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

dmk mp
dmk mp
author img

By

Published : Mar 6, 2021, 5:09 PM IST

Updated : Mar 6, 2021, 5:16 PM IST

பாமகவின் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் மட்டும் அவரவர் வீடுகளிலிருந்து காணொளி வாயிலாக பங்கேற்க, கட்சித் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட மற்ற நிர்வாகிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி, தான் தொடுத்த வழக்கு மூலமாகத்தான் வன்னியர் உள் இடஒதுக்கீடு கிடைத்ததாக கூறுகிறாரே என செய்தியாளர் ஒருவர் ராமதாசிடம் கேட்டார். அதற்கு ராமதாஸ் தனக்கே உரிய பாணியில், ”ஏதோவொரு நாயை பற்றியும், அது கூறுவதை பற்றியும் இங்கு வந்து பேசுகிறாயே...உனக்கு வெட்கமாயில்லை. இந்த தேர்தல் முடியட்டும், அப்புறம் பாரு...” என்றார். ராமதாசின் இந்த பேச்சு பல்வேறு சமூகதளங்களிலும் பரவி வரும் அதே வேளையில், அவருக்கு பலத்த எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

  • வன்னியர் உள்ஒதுக்கீடு 2010ல் CN.ராமமூர்த்தி வழக்கு தாக்கல் செய்தார்

    MBC உள்ஒதுக்கீடு குறித்து 2012ல் ஜனார்த்தனன் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது

    2013ல் நீதியரசர் கவுல் ஒரு மாதத்திற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டும் அரசு பதிலளிக்கவில்லை

    இவரை தான் அநாகரிகமாக நாய் என்று சொல்கிறார்😡 https://t.co/Ymv62Yj1ub pic.twitter.com/4GmNzAbruE

    — Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) March 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது தொடர்பாக திமுகவை சேர்ந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். செந்தில் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், ”வன்னியர் உள்ஒதுக்கீடு கேட்டு 2010ல் சி.என்.ராமமூர்த்தி வழக்கு தாக்கல் செய்தார். எம்பிசி உள்ஒதுக்கீடு குறித்து 2012ல் ஜனார்த்தனன் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. 2013ல் நீதியரசர் கவுல் ஒரு மாதத்திற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டும் அரசு பதிலளிக்கவில்லை. இவரை தான் அநாகரிகமாக நாய் என்று சொல்கிறார்” என்று விமர்சித்துள்ளார். அதோடு, வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என்.ராமமூர்த்தி தொடுத்த வழக்கு மற்றும் அரசாணை ஆகியவற்றின் நகலையும் செந்தில் குமார் அப்பதிவோடு இணைத்துள்ளார்.

மேலும், கேள்வி கேட்ட ஊடகவியலாளரை வெட்கமில்லையா என்று ராமதாஸ் கேட்டிருப்பதும் சர்ச்சையாகியுள்ளது.

இதையும் படிங்க: ’கண் இருந்தால் கண்ணீர் வரும்’ - கே.எஸ்.அழகிரி

Last Updated : Mar 6, 2021, 5:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.