இந்தியாவை சமீப காலமாக கரோனா இரண்டாம் அலை ஆட்டிப் படைத்து வருகிறது. இதற்கெதிராக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில், என்.சி.டி.சியின் இயக்குநர் சுஜீத்குமார் சிங், மகாராஷ்டிராவில் சார்ஸ்-கோவிட் 2 வகையின் வழிவந்த B.1.1.7 என்ற இரட்டை உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்றரை மாதத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்தது, இரட்டை உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் வகையுடன் தொடர்புடையதைக் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள 19 மாநிலங்களில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 761 வகைகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. கர்நாடகாவில் 146 மற்றும் டெல்லியில் 107 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.