ETV Bharat / bharat

அசாமில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும்: பிரதமர் மோடி நம்பிக்கை - அசாமில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை

நல்லாட்சி தந்த பாஜகவுக்கு அசாம் மக்கள் இரண்டாம் முறை வாய்ப்பளிப்பார்கள் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi
author img

By

Published : Mar 21, 2021, 5:04 PM IST

அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். போகாகட் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரட்டை எஞ்ஜின் அரசு, மாநில வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக மேற்கொண்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் கழிவறை, இலவச எரிவாயு, மின்சாரம், மருத்துவ வசதி ஆகியவற்றை பாஜக அரசு தந்துள்ளது. 15 ஆண்டுகள் அசாமில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் மாநிலத்தில் கொள்ளையடிப்பதையே கொள்கையாக கொண்டு செயல்பட்டது.

எனவே, நல்லாட்சி தந்த பாஜகவுக்கு மக்கள் இரண்டாம் முறை வாய்ப்பளிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அசாமில் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 21ஆம் தேதி(மார்ச் 21) நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: நீதிபதிகளின் காலிப் பணியிடங்கள்; நீதி தாமதம் ஆவதற்குக் காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.