ருத்ரபிரயாக் (உத்தராகண்ட்): உத்தராகண்ட் மாநிலத்தின் பிரசித்த பெற்ற சிவாலயமான கேதார்நாத் கோயில் ஆறு மாதங்களுக்கு பின் நேற்று (மே 6) திறக்கப்பட்டது. இந்நிலையில் காலை 6.25 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். குளிர்காலத்திற்காக கடந்த ஆண்டு நவம்பரில் மூடப்பட்ட கேதார்நாத் கோயில் நேற்று வெள்ளிக்கிழமையில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
ஆறு மாதங்களுக்கு பின் கோயில் திறக்கப்பட்டதால் உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அவரது மனைவி கீதா தாமியுடன் கோயிலுக்கு சென்று சிவனை தரிசித்தார். பின்னர் பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். உலக அமைதிக்காக கோயிலில் பிரதமர் மோடி சார்பாக சிறப்பு பூஜை நடைபெற்றது. குளிர்காலத்தில் ஆண்டுதோறும் உத்தராகண்டின் கோயில்கள் மூடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் கேதர்நாத் கோயில் திறக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பரவசத்துடன் சிவனை வழிபட்டனர். மேலும் 12 ஜோதி லிங்கங்கள் வைத்து பூஜிக்கப்படுகின்றன. வேதங்கள் முழங்க பண்டைய கால முறைப்படி கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து நாளை (மே8 ) உத்தராகண்டின் மற்றொரு பிரசித்த பெற்ற சிவாலயமான பத்ரிநாத் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:TODAY HOROSCOPE : மே 7 - இன்றைய ராசி பலன்