குல்கம் (ஜம்மு காஷ்மீர்): தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் உள்ள ஹஞ்ச்போராவில் மறைந்த தேசிய மாநாட்டு கட்சி மூத்தத் தலைவர் வாலி முஹம்மது யடூவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “ஜம்மு காஷ்மீரில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சிலுக்கு (டிடிசி) அதிகாரம் அளித்தால் மாநிலத்தில் அடிமட்ட வளர்ச்சி மற்றும் ஜனநாயகத்தை கொண்டுவர முடியும்.
இந்த வளர்ச்சி சாத்தியமாக, அரசு முறையான அதிகாரம் அளிக்க வேண்டும். ஆனால் இதுவரை ஜனநாயகத்தின் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை” என்றார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஆதரவாக 3 ஆயிரம் கிலோ மீட்டர் விழிப்புணர்வு பயணம்!