ரூர்கீ(ஹரித்வார்): பிரபல உணவக நிறுவனமான ’டோமினோஸ் பீட்சா’ நிறுவனம் சைவ பீட்சா டெலிவரி செய்வதற்குப் பதிலாக அசைவ பீட்சா டெலிவரி செய்ததால் ரூ.9 லட்சம் அபராதம் விதித்து ஹரித்வார் மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மொத்த அபராதமாக ரூ.9 லட்சத்து 65 ஆயிரத்து 918 விதித்துள்ளது நுகர்வோர் ஆணையம்.
இதுகுறித்து வழக்கறிஞர் ஸ்ரீ கோபால் நர்சன் கூறுகையில், “ ரூர்கீ சாகேத் பகுதியைச் சேர்ந்த சிவாங் மிட்டால் என்பவர் ஆன்லைனில் சைவ பீட்சா, மற்றும் சாக்கோ லாவா கேக்கை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு வந்த பார்சலில் அசைவ பீட்சா இருந்துள்ளது. அதைக் கடித்ததும் இதனையறிந்த மிட்டால் உடனே வாந்தி எடுத்துள்ளார். ஏனெனில் மிட்டாலும் அவரது குடும்பமும் சைவ உணவுகளை மட்டுமே உண்பவர்கள். இதனால் அவரது மதநம்பிக்கையும் புண்படுத்தப்பட்டதாக அவர் கருதுகிறார்.
இதனையடுத்து, இதுகுறித்து அவர் ரூர்கியிலுள்ள கங்காநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருந்துள்ளது. இதனையடுத்து, நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து மாவட்ட நுகர்வோர் ஆணையம் தலைவர் கன்வார் சயின், மற்றும் உறுப்பினர்களான விபின் குமார், அஞ்சனா சடா விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், டோமினோஸ் நிறுவனத்திற்கு ரூ.9,65,918 அபராதம் விதித்தனர்’ என்றார்.
இதையும் படிங்க: 'கல்யாணம் செஞ்சு வைங்க' - காவல் நிலையம் சென்ற லெஸ்பியன் காதல் ஜோடி!