காந்திநகர்: குஜராத் மாநிலம் காந்திநகர் ரூபலில் உள்ள வர்தாயினி மாதா கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த கோயிலுக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று(பிப்.16) அமெரிக்க பக்தர் ஒருவர் 1,500 டாலர்களை நன்கொடையாக அனுப்பிவைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 1.12 லட்சமாகும். இந்த டாலர்களால் நேற்று வர்தாயினி மாதா அலகரிங்கப்பட்டது. இதனை உள்ளூர் மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் தரப்பில், அமெரிக்காவிலிருந்து வர்தாயினி மாதா கோயிலுக்கு நன்கொடை வருவது வழக்கம். இந்த முறை பக்தர் ஒருவர் அமெரிக்க டாலர்களை அனுப்பினார். அவரது பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை. இந்த கோயிலுக்கு வரும் நன்கொடைகளில் 50 விழுக்காடு வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: "நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை" மீது 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு - சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நோட்டீஸ்