ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் நச்சினப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த காசு சேரலு என்பவர் நாட்டு நாய் ஒன்றை வளர்த்துவருகிறார். இவர், தனது சேமிப்பு பணம் ரூ.1.50 லட்சத்தை, ஒரு பையில் போட்டு மடியில் கட்டி வைத்துக்கொள்வதை வழக்கமாக வைத்துவந்தார்.
இந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு (ஏப். 26) குளிப்பதற்காக, அந்தப் பணப் பையை கழட்டி வைத்துவிட்டு குளியலறைக்கு சென்றுள்ளார். இதையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது நாயையும், பணப்பையையும் காணவில்லை.
இதையடுத்து, காசு சேரலு நாயை தேடி அலைந்தார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு நாய் வீடு திரும்பியது. ஆனால் பணப்பை அதனிடமில்லை. அக்கம் பக்கத்தினர் ஒரு பையுடன் நாய் சுற்றித்திரிந்தாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காசு சேரலு கிராம் முழுவதும் உள்ள தெருக்களிலும், வீடுகளிலும் பணப்பையை தேடி அலைந்தார். ஆனால், கிடைக்கவில்லை.
இதுகுறித்து, போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும் அவர் நாயை தாக்கவில்லை. ஏனென்றால், இப்படி எதையாவது கவ்வி செல்வதையும், வருவதையும் அந்த நாய் வழக்கமாக வைத்துள்ளதை, அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: கோவக்கார ஓட்டுநரும்... சளைக்காத ஊழியரும்...