இந்தியாவில் ஆங்கிலேயரின் வருகைக்குப்பின் தான், ஆங்கில ஆண்டு முறை வழக்கத்திற்கு வந்தது. அதற்குமுன் பல ஆண்டு முறைகள் இருந்தாலும், தற்போது இந்தியா முழுவதும் ஆங்கில ஆண்டு முறைதான் முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல உலகின் பல நாடுகளிலும் பல வகையான காலண்டர் முறை பின்பற்றப்பட்டது. இதுபோல பின்பற்றப்பட்ட காலண்டர்களின் படி 16ஆம் நூற்றாண்டு வரை ஏப்ரல் முதல் நாளே புத்தாண்டாக கொண்டாடப்பட்டது.
பின்னர் 1562ஆம் ஆண்டில் இருந்த போப் ஆண்டவரான 13ஆவது கிரேகரி பழைய ஜூலியன் காலண்டரை விடுத்து புதிய கிரேகரியன் காலண்டரை கொண்டு வந்தார். அதன்படி ஜனவரி 1 அன்று புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வழக்கத்தை ஏற்றுக்கொள்ள சில காலங்கள் ஆனது.
இந்தப் புதிய காலண்டரை பிரான்ஸ் 1852ஆம் ஆண்டும், ஸ்காட்லாந்து 1660ஆம் ஆண்டும் மற்றும் இங்கிலாந்து 1752ஆம் ஆண்டும் ஏற்றுக்கொண்டன. இதனை தாமதமாக ஏற்றுக்கொண்ட நாடுகள் ஏப்ரல் முதல் நாள் அன்றே புத்தாண்டாக கொண்டாடினார்கள். அவர்களைக் கேலி செய்த மற்ற நாடுகள் அந்த தினத்தை முட்டாள்கள் தினம் என அழைக்கத் தொடங்கியிருந்தனர்.
இருப்பினும் 1582ஆம் ஆண்டுக்கு முன்னதாக 1508ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்குச் சான்றுகள் உண்டு. இதனைத்தொடர்ந்து டச்சு மொழியிலும் 1539ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் என்ற ஒரு வழக்கு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தினம் பிலிப்பைன்ஸ் நாட்டில் வித்தியாசமாக 1466ஆம் ஆண்டு அந்நாட்டு மன்னனை அவரின் அரச சபையில் உள்ள விகடகவி பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.
இது போன்ற பல கதைகள் கூறப்பட்டாலும் இந்த காலகட்டத்திலும் நமது நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் சிறு சிறு விசயங்களில் ஏமாற்றி சந்தோஷம் அடையும் அல்ப புத்தி நம் அனைவருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது.
இதையும் படிங்க:பிரதமர் நரேந்திர மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல்