புதுச்சேரி: சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில், மூன்றாவது நாள் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
அதில் பங்கேற்றுப் பேசிய திமுக உறுப்பினர்கள், புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழையால், நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, பயிர்காப்பீடு முழுமையாக செய்யப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ரங்கசாமி, பயிர் பாதுப்புகள் குறித்து ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும், கூடுதல் நிதி பெறப்படும் எனவும் மக்களிடம் உறுதியளித்து ஆட்சிக்கு வந்தீர்கள். பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தற்போதைய கடன் தொகை மாநிலத்தின் தனிமனிதனின் தலைக்கும் ரூ.82 ஆயிரம் அளவிற்கு இருப்பதாக, திமுக உறுப்பினர் நாஜிம் குற்றம் சாட்டினார்.
வருவாயைப் பெருக்க நடவடிக்கை
அரசின் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, மத்திய அரசின் நிதியுதவியும் கூடுதலைாகப் பெறப்படும் என அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், நமச்சிவாயம் உறுதியளித்தார்கள்
அப்போது, கரோனா தொற்றின் மூன்றாம் அலையைக் கருத்தில் கொண்டு, பள்ளிகளைத் திறப்பதில் அரசு அவசரம் காட்ட வேண்டாம் என சுயேட்சை உறுப்பினர் சிவா வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்டு பேசிய திமுக உறுப்பினர் நாஜிம், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.அதில் எடுக்கப்படும் முடிவை அனுசரித்து புதுச்சேரியிலும் முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பள்ளி-கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு?