பிரமதர் நரேந்திர மோடி குறித்து விமர்சனக் கட்டுரை ஒன்றை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஊடகமான 'தி ஆஸ்திரேலியன்' ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிட்டிருந்தது. அதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய தூதரகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
ஊடகத்தின் தலைமை ஆசிரியர் கிரிஸ்டோபர் டோரேவுக்கு, துணைத் தூதர் கார்த்திகேயன் எழுதிய கடிதத்தில், உங்களை போன்ற மதிப்பு மிக்க ஊடகம் இதுபோன்ற அடிப்படை அற்ற, அவதூறு செய்தியை வெளியிட்டுள்ளது ஆச்சரியத்தை அளிக்கிறது.
இதுபோன்ற செய்திகளை வெளியிடும் முன் உண்மையை சரிபார்க்கமால் வெளியிடுவது தவறானது. கோவிட்-19க்கு எதிரான இந்திய அரசின் போரை மட்டுப்படுத்தும் நோக்கில் இந்தச் செய்திக் கட்டுரை உள்ளது என்று கண்டனம் தெரிவித்துள்ளது.