புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை, யூனியன் பிரதேச திமுக அமைப்பாளர்கள் சிவா எம்எல்ஏ, சிவக்குமார் நாஜிம் ஆகியோர் இன்று (நவம்பர் 5) சந்தித்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக அமைப்பாளர்கள், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கடந்த இரண்டரை ஆண்டுகளாக முதலமைச்சர் நாராயணசாமி சந்திக்கவில்லை என்றும் வேலைவாய்ப்பு, பொதுத்துறை ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் உள்ளிட்ட பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருப்பதாகவும் கூறினர்.
தொடர்ந்து பேசிய அவர்கள், புதுச்சேரி மக்கள் பிரச்னைகளை விரைந்து தீர்க்க உதவுமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்ததாக கூறினர்.