புதுச்சேரி தேமுதிக மாநில செயலாளர் வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மாஹி, ஏனாம், காரைக்கால் உள்ளிட்ட புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதியிலும் தேமுதிக கட்சி தனித்து போட்டியிடும். முதற்கட்டமாக புதுச்சேரியில் ஐந்து தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் பாகூர் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன்.
காலாப்பட்டு தொகுதியில் ரமேஷ், உப்பளம் தொகுதியில் சசிகுமார், நெடுங்காடு தொகுதியில் ராம்ஞானசேகர், திருநள்ளாறு தொகுதியில் ஜிந்தா (எ) குரு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மீதமுள்ள 25 தொகுதிகளுக்கும் இன்று (மார்ச் 12) வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் புதுச்சேரி தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். புதுச்சேரியில் பரப்புரை மேற்கொள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா ஆகியோர் வரவுள்ளனர்” என்றார்.