ETV Bharat / bharat

சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கக் கோரும் வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு!

மகாராஷ்டிராவில் 16 சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரிய வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

maha
maha
author img

By

Published : Jul 11, 2022, 9:19 PM IST

டெல்லி: மகாராஷ்டிராவில் ஷிண்டே உள்ளிட்ட சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் சாய்ந்த நிலையில், உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பொறுப்பேற்றார். முன்னதாக கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஷிண்டேவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவுக்கு எதிராகவும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் இன்று (ஜூலை 11) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்குகளை விசாரிக்க அமர்வு ஏற்படுத்த கால அவகாசம் தேவைப்படுவதாகக் கூறி, உச்சநீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் விசாரணை முழுமையாக முடியும் வரை, சிவசேனாவின் இரண்டு தரப்பு எம்எல்ஏக்கள் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. கொறடா விவகாரத்தை முன்வைத்து சிவசேனாவின் இரு தரப்பு எம்எல்ஏக்களும் மாறி மாறி புகார் அளித்துக் கொண்டனர்.

இதுதொடர்பாக விளக்கம் கேட்டு சிவசேனாவின் 53 எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை தலைவர் கடந்த வாரம் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதையும் படிங்க:சிவசேனாவிலிருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கம் - உத்தவ் தாக்கரே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.