டூல்கிட் வழக்கில் 22 வயதான பெங்களூருவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவரது பிணை மனுவுக்கான விசாரணை டெல்லி பாட்டியாலா அமர்வு நீதிமன்றத்தில் இன்று (பிப்.23) நடைபெற்றது. விசாரணையில் திஷா ரவிக்கு பிணை வழங்கிய நீதிமன்றம், இரண்டு லட்சம் ரூபாய் ஜாமீன் தொகை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
பிணை குறித்து கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்திர ரானா கூறுகையில், "தகுந்த ஆதாரங்கள் இல்லாததை கருத்தில் கொள்கிறேன். குற்றப் பின்னணி இல்லாத 22 வயது இளம் பெண்ணுக்கு பிணை மறுக்க எந்த காரணங்களும் இல்லை" என்றார்.
இதையடுத்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திஷா ரவி இரவு 9 மணி அளவில் விடுவிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: கோட்டையைத் தக்கவைத்த பாஜக, காங்கிரஸ் படுதோல்வி, என்ட்ரி கொடுத்த ஆம் ஆத்மி