டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், கார்வால் கோட்டம் காவல் துறைத் துணைத்தலைவர் (DIG) நீரு கார்க் (Neeru Garg), கண்டோலியா பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அவர் தனது வீட்டருகில் உள்ள ஆப்பிள் மரத்தை குரங்குகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும்; இல்லையெனில் நடவடிக்கை பாயும் எனவும் அங்குள்ள காவலர்களுக்கு உத்தரவிட்டு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தக் கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தரகாண்ட் முதன்மை உள்துறை செயலாளருக்கு முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் அமிதாப், புகார் கடிதம் எழுதியுள்ளார். அதில் காவலர்களை தனது தனிப்பட்ட வேலைகளுக்கு டிஐஜி, பயன்படுத்துவதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்த டிஐஜி நீரு கார்க், இந்த உத்தரவு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் இதுதொடர்பாக விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: +2 பொதுத்தேர்வு: மதிப்பெண் வழங்கும் முறை அறிவிப்பு