புதுடெல்லி : அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் இன்டர்ன்ஷிப் போர்டல் மூலம் இளைஞர்களுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை தொடங்கி வைத்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், “அடுத்த மூன்று ஆண்டுகளில் 100 மில்லியன் வேலைவாய்ப்புகளை வழங்க இலக்கு” வேண்டும் என்றார்.
இது குறித்து தர்மேந்திர பிரதான் ட்விட்டரில், “ நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் ஆண்டாக 2047 இருக்கும். அப்போது, இந்தியாவிற்கான சாலை வரைபடத்தை நாம் தயாரிக்கும் போது,இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் அதிக உற்பத்தித்திறனை உருவாக்குவதற்கும் அடுத்த 2-3 ஆண்டுகளில் 100 மில்லியன் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குவதை இலக்காகக் கொண்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
-
As we prepare the roadmap for India @ 2047, the year India will complete 100 years of independence, we must work together and aim to provide 100 million internship opportunities in the next 2-3 years for boosting employability of youth and building a more productive economy.
— Dharmendra Pradhan (@dpradhanbjp) March 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">As we prepare the roadmap for India @ 2047, the year India will complete 100 years of independence, we must work together and aim to provide 100 million internship opportunities in the next 2-3 years for boosting employability of youth and building a more productive economy.
— Dharmendra Pradhan (@dpradhanbjp) March 30, 2022As we prepare the roadmap for India @ 2047, the year India will complete 100 years of independence, we must work together and aim to provide 100 million internship opportunities in the next 2-3 years for boosting employability of youth and building a more productive economy.
— Dharmendra Pradhan (@dpradhanbjp) March 30, 2022
மேலும், “இந்த நடவடிக்கையை ஆரம்பம் என்று கூறிய அமைச்சர், "அனைவருக்கும் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குவதை இலக்காகக் கொள்ள வேண்டும்" என்று கூறினார். தொடர்ந்து, "NEP 2020 இளைஞர்களின் எதிர்காலத்தை தயார்படுத்துவதற்காக கல்வி நிறுவனங்களுடன் தொழில்துறையை இணைக்க வலியுறுத்துகிறது.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் வரவேற்கத்தக்க தொடக்கமாகும், ஆனால் எங்கள் கல்வி நிறுவனங்களும் தொழில்துறையும் அனைவருக்கும் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
தொழில்துறை குறித்து அவர் கூறுகையில், “தொழில்துறையானது இன்று தொழிற்பயிற்சி, திறன் மற்றும் மறு-திறன் ஆகியவற்றின் அவசியத்தை அங்கீகரிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மனிதநேயம் மற்றும் புதிய வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உட்பட இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை பல்வகைப்படுத்த இங்கு இருக்கும் நிறுவனங்களையும் தொழில்துறையையும் ஊக்குவிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இலங்கைத் தமிழர்களுக்கும் சம உரிமை - பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை