தன்பாத்: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் பிரதான்கந்தா ரயில் நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதை கட்டுமானத்தில் நேற்றிரவு(ஜூலை 12) திடீரென மண் சரிவு ஏற்பட்டது. சுரங்கப்பாதை கட்டுமான பணியில் இருந்த ஆறு தொழிலாளர்கள் இந்த மண் சரிவில் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ரயில்வே போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 4 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வழியாக சரக்கு ரயில் ஒன்று கடந்து சென்றதாகவும், அதன் பிறகே மண் சரிவு ஏற்பட்டதாகவும் நேரில் பார்த்த பொதுமக்கள் கூறுகின்றனர். ஆனால் உண்மையை கண்டுபிடிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டா நண்பனை பார்க்க விபரீத முடிவை எடுத்த 8ஆம் வகுப்பு மாணவி