தன்பாத்: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சாலை விபத்தில் நினைவாற்றலை இழந்தவருக்கு மருத்துவர்கள் புது வாழ்வு அளித்துள்ளனர்.
அறுவை சிகிச்சைக்கு முன் சுமார் 3 மாதங்கள் குளிரூட்டப்பட்ட அவரது மண்டை ஓட்டில் இரண்டு வெற்றிகரமான அறுவை சிகிச்சைகள் செய்து மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை குழுவினர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
நிர்சா பகுதியில் வசிக்கும் கவுரங் சூத்ரதார், கடந்த ஏப்ரல் 28 அன்று அவருக்கு விபத்தில் அவர் தனது நினைவாற்றலை முற்றிலும் இழந்தார். தன்பாத் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது தலையை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், மற்றும் மூன்று பேர் கொண்ட டாக்டர்கள் குழுவுடன் இணைந்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அவரது நினைவாற்றலை மீட்டுள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்,
”முதலில் அவரின் மண்டை ஓடு உறைநிலையில் 3 மாதங்கள் வைக்கப்பட்டு, பின்னர் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் தலையில் ஏற்பட்ட ரத்த உறைதலை குணப்படுத்தினோம்.
இரத்த உறைவு அகற்றப்பட்ட பிறகு, மற்றொரு அறுவை சிகிச்சை மூலம் மண்டை ஓடு இயல்பு நிலைக்குத் திரும்பியது, நோயாளி முற்றிலும் நலமாக உள்ளார். அவரது நினைவாற்றல் முன்பை விட இப்போது மேம்பட்டுள்ளது”, என்று தெரிவித்துள்ளனர் .
இதையும் படிங்க: நோயாளியின் கண்ணிலிருந்து 6 அங்குல கத்தி அகற்றம் - மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு