டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் காதிமா தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் வேட்பாளர் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார். இருப்பினும், முதலமைச்சர் பொறுப்பேற்றார்.
இந்த பதவியை தக்க வைக்க ஆறு மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால், சம்பவாத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். இதற்கு முன்னதாக அங்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த கைலாஷ் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் சம்பாவத் தொகுதி இடைத்தேர்தலில் 55, 000 வாக்குகள் வித்தியாசத்தில் தாமி வெற்றி பெற்றார். இதுகுறித்து தாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ""அன்புள்ள சம்பாவத் மக்களே. இந்த இடைத்தேர்தலில் வாக்குகள் மூலம் நீங்கள் அளித்த அன்பு, ஆசீர்வாதத்தால் என் இதயம் உணர்ச்சிவசப்பட்டது. பேச முடியாமல் இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ”மசூதிகளில் சிவலிங்கங்களை தேட வேண்டிய அவசியமில்லை” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்