குஜராத் மாநிலத்தில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். புகழ்பெற்ற சோம்நாத் கோயிலில் ரூ.50 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை திறந்து வைத்து பேசிய பிரதமர் பயங்கரவாதம் குறித்து விவரித்தார்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், பிரதமர் பயங்கரவாதம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது, "சோம்நாத் கோயில் பல முறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. சிலைகள் சேதப்படுத்தப்பட்டு, கோயிலை முற்றாக அழிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் இந்த தாக்குதலுக்கு பின்னரும் தமது புராதான பெருமையுடன் சோம்நாத் கோயில் மீண்டு வந்துள்ளது.
பயங்கரவாதம் மூலம் தனது ராஜ்ஜியத்தை உருவாக்கலாம் என சில சக்திகள் முயற்சிக்கலாம். அவை குறுகிய காலம் ஆதிக்கம் செலுத்தினாலும் நிரந்தரமாக நீடிக்க முடியாது. இதற்கு சோம்நாத்தே சிறந்த உதாரணம்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2021- புது லுக்கில் கலக்கும் தோனி