ETV Bharat / bharat

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு மத்தியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு - ஜம்மூ காஷ்மீரில் தொடர் கொலைகளுக்கு மத்தியில் சுற்றுலாப் பயணிகள் வரவு அதிகரிப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதற்கு மத்தியிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

ஜம்மூ-காஷ்மீரில் தொடர் கொலைகளுக்கு மத்தியில்  சுற்றுலாப் பயணிகள் வரவு அதிகரிப்பு

author img

By

Published : Jun 5, 2022, 3:00 PM IST

ஸ்ரீநகர்(ஜம்மு-காஷ்மீர்): ஜம்மு- காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என பலதரப்பினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. உயிர்சேதமும் ஏற்பட்டு வருகிறது. எல்லை பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கலவரங்களுக்கு மத்தியில் காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஜனவரி முதல் மே வரை காஷ்மீருக்கு 7 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகம் எனக் கூறப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு மத்தியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

புள்ளிவிவரங்களின்படி ஜனவரியில் 61 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரின் பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர். பிப்ரவரியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. இதேபோல் மார்ச் மாதத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளும், ஏப்ரலில் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகளும் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வருகை தந்துள்ளனர். மொத்தத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

2021ஆம் ஆண்டில் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு வந்தாலும் இந்த ஆண்டு முந்தைய ஆண்டுகளை விட அதிக பேர் வருகைதருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. வரலாற்றில் முதன்முறையாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து தினமும் சுமார் 100 விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஜூன் மாதத்திற்கான ஹோட்டல் முன்பதிவு 95% முடிந்துவிட்டதாக கூறுகின்றனர். பயங்கரவாத தாக்குதலுக்கு மத்தியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது அலுவலர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:Encounter in J-K's Anantnag: ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக் கொலை!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.