லக்னோ: இந்தியாவில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஃபிரோஷாபாத் மாவட்டத்தில் 12 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தேசிய நோய் கட்டுபாட்டு மையம் கடந்த வாரம் அம்மாவட்டத்தில் ஆய்வு செய்து, நோய் கட்டுபாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. மாநில அரசும் நோய் பரவலைத் தடுக்க வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து, தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நோய் பரவல் காரணமாக அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை வரை டெங்கு காய்சலுக்கு 114 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் 88 பேர் குழந்தைகள் என மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இன்சூரன்ஸ் கட்டாயம் - உத்தரவை திரும்பப் பெற்றது நீதிமன்றம்