ETV Bharat / bharat

காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏக்கு அமைச்சர் பதவி வழங்ககோரி ஆர்பாட்டம்: பேனர் கிழிப்பு!

புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் பாஜக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

t
t
author img

By

Published : Jun 19, 2021, 4:15 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியான பாஜக - என் ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. காங்கிரஸிலிருந்த ஜான்குமார் விலகி பாஜகவில் இணைந்து காமராஜ் நகர் தொகுதியில், போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் அவரது மகனும் பாஜகவில் இணைந்து நெல்லிதோப்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

புதுச்சேரி முதலமைச்சராக என். ரங்கசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அமைச்சரவை முடிவு செய்யப்படமால் உள்ளது. இந்நிலையில், சிறுபான்மை பிரிவை சேர்ந்த ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக வேறொரு நபருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியானது.

t
பாஜக பேனர் கிழிப்பு

இதனால் காமராஜ் நகர், நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள ஜான்குமாரின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சித்தானந்தா நகர் பாஜக தலைமை அலுவலகம் முன்பு கூடி ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஆர்பாட்டக்காரர்கள் பாஜக அலுவலகம் முன்பு இருந்த ஷட்டரை உடைத்து அலுவலகத்தில் இருந்த பேனரை கிழித்தனர். இதனால் அப்பகுதி போராட்டகளமாக காட்சியாளித்தது.

இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினரும் பாஜக நிர்வாகிகளும் ஆர்பாட்டகாரர்களை சமாதனப்படுத்தினர். மேலும் இதுகுறித்து கட்சி மேலிடத்திற்கு தெரிவிக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் தேர்தல் - வேட்பு மனுத்தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.