லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா அருகே உள்ளது பிஸ்ராக் கிராமம். இங்குள்ள சீர் விஷ்ரவா என்பவரின் வீட்டில்தான் ராவணன் பிறந்ததாக கருதப்படுகிறது. இங்குள்ள சிவன் கோயில் ராவணன் வழிபட்ட கோயில் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக அந்த கிராம மக்கள் ராவணன் கொல்லப்பட்ட தினத்தை துக்க நாளாக கருதுகின்றனர்.
இதனால் ராம்லீலா மற்றும் தசரா ஆகிய பண்டிகைகளை பிஸ்ராக் கிராம மக்கள் கொண்டாடுவதில்லை. இதுகுறித்து ராவணன் வழிபட்டதாக கூறப்பட்டும் சிவன் கோயிலின் பூசாரி கூறுகையில், “எங்கள் கிராம மக்களுக்கு ராவணன் மீது மிகுந்த பற்றுள்ளது. அதனால் தசரா பண்டிகையை நாங்கள் கொண்டாடுவதில்லை.
இந்த நடைமுறைக்கு மாறாக தசரா விழாவைக் கொண்டாடத் துணிந்தவர்களுக்கும் அசம்பாவிதம் நடந்ததால் அதன்பின் யாரும் கொண்டாடுவதில்லை. குறிப்பிட்டு சொன்னால் பிஸ்ராக் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராவணனை தங்கள் மகனாக பாவித்து, அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கிறார்கள். தசரா பண்டிகையின் போது கிராமமே வெறிச்சோடி காணப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெகு விமரிசையாக நடைபெற்ற அண்ணாமலையார் கோயிலின் 8ஆம் நாள் நவராத்திரி விழா