தனிநபர் தகவல்களைத் திருடிய பாஜக மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் அலுவலரிடம் ஜனநாயக வாலிபர் சங்கம் புகார் அளித்துள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுச்சேரி பிரதேச குழு சார்பாக அக்குழு மாநிலத் தலைவர் ஆனந்த் தலைமையில் தேர்தல் அலுவலர் பூர்வா கார்க்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டது.

அதில், எதிர்வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக புதுச்சேரியில் உள்ள 30 தொகுதியில் 952 பூத் வாரியாக வாக்காளர்களின் தொலைபேசி எண்களைச் சேகரித்து தனிநபர் தகவல்களைத் திருடிய பாஜக மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுச்சேரி பிரதேச குழு சார்பாகப் புகார் மனு அளிக்கப்பட்டது.