டெல்லி: டெல்லியில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் G20 உச்சி மாநாடு நடைபெறும் பாரத் மண்டபம் தண்ணீர் தேங்கி இருப்பது போல் உள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியினர் விவாதம் செய்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு G20யில் அழைப்பு தராதது குறிப்பிடத்தக்கது.
-
करोड़ों रुपये की लागत से G20 के सदस्यों की मेहमाननवाजी के लिए बनाए गए 'भारत मंडपम' की तस्वीरें।
— Srinivas BV (@srinivasiyc) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
विकास तैर रहा है...https://t.co/EcQBcM7o7E
">करोड़ों रुपये की लागत से G20 के सदस्यों की मेहमाननवाजी के लिए बनाए गए 'भारत मंडपम' की तस्वीरें।
— Srinivas BV (@srinivasiyc) September 10, 2023
विकास तैर रहा है...https://t.co/EcQBcM7o7Eकरोड़ों रुपये की लागत से G20 के सदस्यों की मेहमाननवाजी के लिए बनाए गए 'भारत मंडपम' की तस्वीरें।
— Srinivas BV (@srinivasiyc) September 10, 2023
विकास तैर रहा है...https://t.co/EcQBcM7o7E
G20 உச்சி மாநாடு நடைபெற்ற பாரத் மண்டபத்தில் தண்ணீர் தேங்கி இருப்பது போல் உள்ள காட்சிகளை பயன்படுத்தி இளைஞர் நலன் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் பிவி தனது X தளத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் G20 உச்சி மாநாடு தலைவர் கலந்து கொள்வதற்கு கட்டப்பட்ட பாரத் மண்டபம் எனக் குறிப்பிட்டு "விகாஸ் நீச்சல் அடிக்கிறான்" என கூறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில் விகாஸ் என்ற சொல்லை வளர்ச்சி என்ற அடிப்படையில் அவர் குறிப்பிட்டு இந்த பதிவை செய்துள்ளார்.
-
खोखले विकास की पोल खुल गई
— Congress (@INCIndia) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
G20 के लिए भारत मंडपम तैयार किया गया। 2,700 करोड़ रुपए लगा दिए गए।
एक बारिश में पानी फिर गया... pic.twitter.com/jBaEZcOiv2
">खोखले विकास की पोल खुल गई
— Congress (@INCIndia) September 10, 2023
G20 के लिए भारत मंडपम तैयार किया गया। 2,700 करोड़ रुपए लगा दिए गए।
एक बारिश में पानी फिर गया... pic.twitter.com/jBaEZcOiv2खोखले विकास की पोल खुल गई
— Congress (@INCIndia) September 10, 2023
G20 के लिए भारत मंडपम तैयार किया गया। 2,700 करोड़ रुपए लगा दिए गए।
एक बारिश में पानी फिर गया... pic.twitter.com/jBaEZcOiv2
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டில் உலக அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஆப்பரிக்க நாடுகள் G20 நாடுகள் அமைப்பில் நிரந்தர உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டது. மேலும் ரஷ்யாவை எதிர்க்காமல் உக்ரைன் ரஷ்யா மோதலை நிவர்த்தி செய்யும் வகையிலான விவாதங்கள், டெல்லி ஜி20 கூட்டு பிரகடனத்தில் இடம்பெற்று இருந்தன.
இதையும் படிங்க: G20 மாநாட்டின் தலைமை பொறுப்பை பிரேசில் அதிபரிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி!
இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் நேற்று மற்றும் இன்று (செப்.9 மற்றும் செப்.10) G20 உச்சி மாநாடு நடைபெற்றது. இதற்கிடையில் டெல்லியில் நேற்று கனமழையும் தொடங்கி இன்று வரை மழை தொடர்ந்து பெய்தது. இதனால், டெல்லியில் பல்வேறு இடங்கள் தண்ணீர் குளங்களாக காட்சியளித்தது. G20 உச்சி மாநாடு காரணமாக நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு எற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. இதனால் டெல்லியில் போக்குவரத்து சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
கனமழையிலும் G20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலகத் தலைவர்கள் இன்று ராஜ்காட் பகுதியிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவகத்தில் மரியாதை செலுத்துவதற்காக ஒன்று கூடினர்.
G20 உச்சி மாநாடு நடந்த இடத்தில் தேங்கி இருந்த தண்ணீரை புகைப்படம் எடுத்து எதிர்கட்சிகள் மற்றும் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை உள்ளடக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் அறிக்கையின் படி டெல்லியில் இன்று (செப்டம்பர் 10ஆம் தேதி) காலை நிலவரப்படி மழையின் அளவு 39 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது. மேலும் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 23.5 டிகிரி செல்சியசாக இருந்துள்ளது என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Chandrababu Naidu: சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்றம் காவல்.. ராஜமுந்திரி சிறையில் அடைக்க ஏற்பாடு!