டெல்லி : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எந்த வித முன்னறவிப்பும் இன்றி டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் அத்துமீறி நுழைந்ததாகவும் அதனால் விடுதி பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் சாப்பாட்டு நேரம் தடைபட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் குற்றஞ்சாட்டி உள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள முதுகலை பட்டபட்டிப்பு பயிலும் ஆண்களின் விடுதிக்கு திடீரென சென்ற ராகுல் காந்தி சென்றார். வெள்ளை நிற டி-சர்ட், டிரவுசர், ட்ரிம் செய்த தாடி என புது தோற்றத்தில் வந்த ராகுல் காந்தியை கண்ட மாணவர்கள் திரண்டு வந்தனர். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி அனைவருடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தற்போது பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. ராகுல் காந்தி எந்த வித முன் அறிவுப்பும் இன்றி தீடீரென மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்ததாகவும், அதனால் விடுதியில் திடீர் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், கடந்த மே 5 ஆம் தேதி, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திடீரென பல்கலைக்கழக முதுகலை மாணவர்களின் விடுதிக்குள் நுழைந்ததாகவும், ராகுல் காந்தியுடன் வெளி ஆட்கள் நிறைய பேர் விடுதிக்குள் நுழைந்ததால் மாணவர்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த ராகுல் காந்தி, மாணவர்களுடன் கலந்துரையாடிவிட்டு அவரகளுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டதாக கூறப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் உணவு நேரம் கெட்டுபோனதாக பல்கலைக்கழகம் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இது போன்ற அத்துமீறல்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மேலும் விடுதி நிர்வாகம் ராகுல் காந்தி வருகை குறித்து தகவல் தெரிவித்ததை அடுத்து விரைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இளம் தோற்றத்தில் காணப்பட்ட ராகுல் காந்தி, விடுதி மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்கள் தங்கள் வாழ்க்கைக்கான பயணத்தில் எதிர்கொள்ளும் இடையுறுகள் குறித்து இந்த கலந்துரையாடலின் போது ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து முகர்ஜி நகர் பகுதிக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு யுபிஎஸ்சி மற்றும் எஸ்எஸ்சி போன்ற தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுடன் கலந்து உரையாடினார். மாணவர்களுடன் சாலையோர நாற்காலியில் அமர்ந்த ராகுல் காந்தி, அவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தார்.
-
युवाओं के बीच जननायक
— Congress (@INCIndia) May 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
दिल्ली विश्वविद्यालय के PG मेंस हॉस्टल में छात्रों के साथ @RahulGandhi जी.
काश ऐसी बातचीत PM मोदी कर पाते, युवाओं को समझ पाते.
लेकिन... उन्हें अपने 'मन की बात' से फुर्सत कहां. pic.twitter.com/xvvYDrCYbT
">युवाओं के बीच जननायक
— Congress (@INCIndia) May 5, 2023
दिल्ली विश्वविद्यालय के PG मेंस हॉस्टल में छात्रों के साथ @RahulGandhi जी.
काश ऐसी बातचीत PM मोदी कर पाते, युवाओं को समझ पाते.
लेकिन... उन्हें अपने 'मन की बात' से फुर्सत कहां. pic.twitter.com/xvvYDrCYbTयुवाओं के बीच जननायक
— Congress (@INCIndia) May 5, 2023
दिल्ली विश्वविद्यालय के PG मेंस हॉस्टल में छात्रों के साथ @RahulGandhi जी.
काश ऐसी बातचीत PM मोदी कर पाते, युवाओं को समझ पाते.
लेकिन... उन्हें अपने 'मन की बात' से फुर्सत कहां. pic.twitter.com/xvvYDrCYbT
இதையும் படிங்க : போதை ஏறிப்போச்சு..! - திருமணம் நின்னு போச்சு..!- உ.பி.யில் மணமகன் அட்டகாசம்!